ABOUT ME
Welcome to my blog. I would like to explore and share my thoughts, stories, laughs and feelings. During pandemic and lockdown, I had time to slow down and think again deeply and paved the way to write again after 25 years.
எப்போதும் போல எழுத்தும் வாசிப்பும் தொங்கிக்கொண்டே வருகின்றன. ஆனாலும் இப்போதெல்லாம் வேறு பரிமாணங்களையும், சிந்தனைகளையும் தொட்டுச் செல்கின்றது.
மனதிற்குள் சுற்றி சுழன்றுகொண்டிருக்கின்ற கதைகளையும், கட்டுரைகளையும், கனதிகளையும் மீண்டும் 25 வருடங்களுக்கு பின்பு மீண்டும் எழுதத் தொடங்குகின்றேன்.
நிச்சயமில்லாத, எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற வாழ்விற்கும் இருப்பிற்குமான போராட்ட காலங்களில் வாழ்ந்து படித்து வளர்ந்து வேலை செய்து அனுபவங்களை சேகரித்துக் கொண்டிருந்த காலத்தில் 90களில் 10 ற்கு மேற்பட்ட சிறுகதைகளையும, பல வேறு கட்டுரைகளையும்(பிரசுரிக்கப்பட்டவைகள்) எழுதினேன்.
இப்போது வாழ்க்கையையும் அனுபவங்களையும் இன்னுமொரு பார்வையிலும், வேறு பல பரிமாணங்களுடனும் பார்க்கக்கூடியதாக இருக்கிறது, அனுபவங்களை பகிரக்கூடியதாக இருக்கிறது
