top of page

ஆவணக்காப்பகப்படுத்தலும் அதன் முக்கியத்துவமும்.

  • nalayiniindran
  • Aug 17, 2020
  • 2 min read

Updated: Mar 1


சுவடிகள்/காப்பக ஆவணங்கள்

பரந்துபட்டபொதுமக்கள் பதப்பிரயோகத்தினுள் இல்லாததும், ஆயினும் தனித்துவமான செயற்பாடுகளையும் நோக்கங்களையும் கொண்டதுமானது காப்பக ஆவணங்கள் அல்லது சுவடிகள். இவை காலத்தையும் பெறுமானத்தினையும் தனக்குள் கொண்டுள்ளவை. இவை ஆவணங்கள் பதிவேடுகள் என்ற பொதுப்பிரயோகத்திலிருந்து வேறுபடுகின்றது.


இக்காப்பக பதிவேடுகள் நடைமுறை பாவனையிலிருந்து நின்றவையாகவோ அல்லது விசேட தேவைகளுக்காக மட்டும் நடைமுறையில் தருவிக்கப்பட்டவையாகவோ இருப்பதுடன் அந்நிறுவனத்திற்கான முக்கியமான விபரங்களை உள்ளடக்கியதாகவும் இருப்பதுடன் அவை பேணுகையில் வைக்கப்படுவதும் பேணப்படுவதனாலும் அதன் பெறுமதியை உணர்த்தக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.



ree

இதனுடைய முக்கியத்துவத்தினையும் அதன் பங்கு பற்றியும் நோக்கும்போது இவை தொடர்பாக உள்ள சில சொற்பிரயோகங்களையும் கவனத்தில் கொள்வது அவசியம். ஏனெனில், இவ்வாறான சொற்பிரயோகங்களினால் பல குழப்பங்கள் ஏற்படுகிறது. இது இலகுவானதொன்றல்ல. ஒவ்வொரு நாட்டிற்குமிடையே பல வேறுபாடுகள் இருக்கின்றன. இவற்றை சரியாக தெளிவுபடுத்திக்கொள்வதன் மூலமே செயற்பாடுகளையும் சரியான முறையில் மேற்கொள்ளலாம்.


•Records பதிவுகள்/ பதிவேடுகள்

•Documents ஆவணங்கள்

•Archives சுவடிகள் /காப்பக ஆவணங்கள்்். an archival document – a collection of items which from evidence of the activities of a person or institution.


ஆவணகம்/ ஆவணக்காப்பகம்.

பல்வேறு நிறுவனங்களின் ஆவணத் தொகுதிகளைப் பெற்று, வைப்பில் வைத்து, நிர்வகித்து அவற்றைப் பயன்பாட்டிற்குக் கிடைக்கச் செய்யும் ஆவணக்காப்பக நிறுவனம்;


an institution that receives archives from various organisations, stores, manages and makes them available for use; an archive institution –


•Documentation ஆவணம் product, பொருள்


ஆவணப்படுத்தல் (process, செயல்பாடு)


ஆவணப்படுத்தல் என்ற தமிழ் சொல்லானது, வரலாறு மற்றும் அறிவை ஆவணப்படுத்தல், பாதுகாத்தல் என்பவற்றை பரவலாக குறிப்பிட்டு நிற்கின்றது.


ஆவணக்காப்பகப்படுத்தல்: •வரவாற்று ஆதாரமான அல்லது பிற ஆராய்ச்சிகளுக்கான ஆதாரமான பெறுமதியைக் கொண்ட காப்பக ஆவணங்களை காப்பகப்படுத்தல்


பொதுவாக காப்பக ஆவணங்கள் வரலாற்று சான்றுகளாகவும் நடந்தேறிய நிகழ்வுகளிற்கு ஆதாரமாகவும், தனிநபர் மற்றும் நிறுவனம் பற்றியும் கூறுகின்றன. மேலும் அடையாளத்தினை உணர்த்தி நிற்பதுடன் கலாசார கூறுகளையும் விளங்கிக் கொள்வதற்கும் உதவுகின்றன.


எதிர்கால பிரச்சனைகளுக்கான தீர்மானங்களை/ முடிவுகளை எடுப்பதற்கும் இவை முக்கியமானவை. இதில் இன்னுமொரு விடயம் என்னவென்றால் இவை

எதிர்கால ஆராய்ச்சி நோக்குடன் இப்பதிவேடுகள் உருவாக்கப்படவில்லை. இவை பெரும்பாலும் நடுநிலையான முதன்மையான வளங்கள். மேலும் இவை வரலாற்று நிகழ்வுகளை தன்னகத்தே கொண்டுள்ளதுடன் நாளாந்த செயற்பாடுகளினால் உருவாக்கப்பட்டவை மட்டுமல்லாது வெளியிடப்படாதவைகளும் கூட.


இந்த முதன்மை வளங்கள் வரலாற்று முக்கியத்துவங்களை , நிகழ்வுகளை கொண்டதாலும் அவற்றிற்கு ஆதாரங்களாகவும் இருப்பதனால் அவற்றின் முக்கியத்துவம் கருதி சேகரிக்கப்பட்டவை. இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு ஆராய்ச்சிகளுக்கு வைக்கப்படுபவை.


இலங்கையில், தேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்தில் உள்ள காப்பக பதிவேடுகளை ஆராய்ச்சி நோக்கங்களிற்காக பாவிக்கப்படுவது தமிழ் ஆராய்ச்சியாளராகளிடையே பெருமளவில் குறைந்துவிட்டது.


இலங்கை தேசிய சுவடிகள் காப்பகத்தில் ஒல்லாந்தர் காலத்து காப்பக பதிவேடுகள், ஆங்கிலேயர் காலத்து காப்பக பதிவேடுகள், அதற்கு பிற்பட்ட காலத்து காப்பக பதிவேடுகள், இலங்கையில் பிரசுரிக்கப்பட்ட பத்திரிகைகள், பிரசுரங்கள், இவை மட்டுமல்லாது அறிக்கைகள், வரைபடங்கள், ஒளிப்படங்கள் என்பனவும் காணப்படுகின்றன. இச்சேகரிப்பகளின் மூலம் அக்காலத்து வரலாறுகளை அறிய முடிகிறது. இவை எவ்வாறு நிர்வாக கருவியாக பயன்படுத்தப்பட்டன, நிதி நீதி மற்றும் சட்ட விஸ்தரிப்புகள், கொள்கை திட்டமிடல்கள், சமூக பொருளாதார பிரச்சனைகள் என பல விடயங்களை அறிய முடிகிறது.


முக்கியமாக தமிழ் பகுதிகளில் உள்ள நிர்வாகப் பதிவேடுகள் பேணப்படுவதும், மதிப்பீடு செய்யப்பட்டு காப்பகப்படுத்தலும், அதன் முக்கியத்துவமும் வெளிக்கொணரப்படுவதும் மிகவூம் அவசியமானதொன்று.

புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் காப்பகப்படுத்தல் செயற்பாடூகளைப் பார்க்கும்போது, அவற்றிற்கான ஒரு தேவையும் கூட விரிந்து நிற்கிறது.கடந்த கால வரலாறுகள், போர்க்கால சூழ்நிலைகள், பரிணாம வளர்ச்சிகள், எல்லாமே ஆவணப்படுத்தப்பட வேண்டும்/ காப்பகப்படடுத்தப்பட வேண்டும். தமிழ் மக்களை அடையாளப்படுத்தி, புலம்பெயர் அனுபவங்களை ஆவணமாக்கல்/காப்பகப்படுத்தலால் சேகரித்து

எடுத்துச்செல்லக் கூடியதாக இருக்கவேண்டும்.

பல நிறுவனங்கள், அமைப்புகள் காப்பகப்படுத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். பல தளங்களிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. எண்ணிம முறையிலான ஆவணங்கள், மின்னஞ்சல்கள், எண்ணிம புகைப்படங்கள், ஒளிக்காட்சிகள், வவலத்தளங்கள் உட்பட பலவகையான ஆவணங்கள் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவை சரியான முறையில் வகைப்படுத்தி, மதிப்பீடு செய்து பாதுகாக்கப்பட வேண்டியது முக்கியம். மட்டுமல்லாது அழிந்து போகாமல் பாதுகாக்கப்படவும் வேண்டும்.


மேலும், புலம்பெயர் நாடுகளில் தமிழ் சமூக ஆவண காப்பகங்களை அமைத்துக் கொள்வதும் , இத்துறை சார் பிரதான நினுவனங்களுடன் இணைந்து செயற்படுவதும் முக்கியமானதும் அவசியமானதும் ஆகும்.














Recent Posts

See All
தோம்புகள் -

இலங்கையில் போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர் கால நிர்வாகப்பதிவேடுகள் தோம்பு என்றால் என்ன தோம்பு என்பது 17ம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர்...

 
 
 

Comments


Post: Blog2_Post

Subscribe Form

Thanks for submitting!

  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2020 by Nalayini's Blog. Proudly created with Wix.com

bottom of page