top of page

செம்பொன்- சந்திரா ரவீந்திரன் by Nalayini Indran: நூல் விமர்சனம்

  • nalayiniindran
  • Jul 23
  • 4 min read

இந்த நாவலினை ஒரு வாசகராக அல்லது விமர்சகர்கராகவோ வெளியே நின்று விமர்சிப்பது கடினமானது. நாங்கள் இதே காலகட்டத்தில், கதாபாத்திரங்களுடன் இதே இடங்களில் வாழ்ந்திருக்கின்றோம்.  அதனால், இது ஒரு உணர்வு பூர்வமான வாசிப்பும் விமர்சனமும்.


நாவலின் தலைப்பு:-செம்பொன், பல விதமான பிரத்தியேகமான அர்த்தங்களை கொண்டு சிந்திக்க முடிகிறது. அதே ஒரு கதையை செல்கின்றது. ஒரு பெருமைக்குரிய சிவந்த பவித்திரமான மண். அதில், துன்பம் தெரிகிறது, தியாகம்,  பெருமை, அவலங்கள், என எல்லாமே வருகிறது.   அட்டைப்படம்:- வீடு, தாய்மைத் தோற்றம், பிள்ளைகள் அல்லது வீடு, தாய்மை, போராளிகள் அல்லது விடுதலைப் போராட்டம், போராளிகள், வேள்வியாகம். இப்படி பல வகையான எண்ணக்கருக்கள் வருகின்றன. நடுவில் இருக்கும் மஞ்சள்- வீடு சிதறப்பட்டமையையும் கூட காட்டி நிற்பதாக படுகிறது.        

    

நாவல் ஆசிரியர், அவர் குடும்பம், எல்லோரும் நன்றாகத் தெரிந்தவர்கள், ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள், ஒன்றாகப் படித்தவர்கள், ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள், நடந்தவற்றை அனுபவித்தவர்கள், அவலப்பட்டவர்கள். 80களின் முக்கியமான குழப்பமான பகுதிகளில் நாங்கள் வாழ்ந்த இடம், பழகிய இடங்கள், கதாபாத்திரங்களுடன் வாழ்ந்திரூக்கின்றோம், பழகியிருக்கிறோம்.

உணர்வு பூர்வமாக மீண்டும் அந்த இடத்திற்கு சென்று வாழ்ந்து அவர்களை பார்த்து விட்டு வந்த நிலைமையினை இந்நாவல் வழங்கி நின்றது.


அவர்கள் ஒவ்வொரு யையும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியமை ஆசிரியரின் வெற்றியே. கனதியான நெகிழ்வான  ஒரு நிலைமை.

மேலும், எல்லோரும் குறிப்பிட்டிருப்பதனைப் போல, இந்நாவல், எந்த வகையானது என்பது. இது நாவலா- இங்கே வருபவர்களை கதாபாத்திரங்கள் என சொல்லலாமா.? ஏனெனில், நன்கு தெரிந்தவர்கள், ஒன்றாக வளர்ந்தவர்கள். Memoir என்று சொல்லலாமா? Non fiction இல்லை. auto biographical fiction என செல்லலாமா? போர்க்காலம் பற்றிய பதிவேட்டு நாவலா?இப்படி ஒரு நீண்ட ஆய்வு. ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியையும்,  உண்மை சம்பவங்களையும், கதாபாத்திரங்களையும் கொண்டிருப்பதனால், memoir என்பது பொருத்த மானது. ஆயினும், autobiography யாக எழூதப்பட்டிருக்கலாமோ, அதன் கனதி இன்னமும் நன்றாக இருந்திருக்கும் எனவும் நினைத்தேன். பதிவ செய்யப்பட  வேண்டிய வரலாற்று  உண்மைகளை கொண்டது. வரலாற்றினை தொலைந்து விடாமல் உண்மையை எழுதி பதியப்பட்டது. இது ஒரு வரலாற்று தேவையும் கூட.

இன்னுமொரு வகையில், non fiction ஆக வரலாற்றினை எழுதுவதிலும் விட, பயம், உயிர்வாழ்வு, நெறிச்சிக்கல்கள், இழப்பு, moral, conflicts, இவற்றையெல்லாம் சொல்லும்போது, போர்க்காலம்/ போர்becomes so personal. கதாபாத்திரங்களின் நாமும் இணைந்து கொள்கின்றோம். ஆசிரியருடன் அந்த பயணத்தில் நாமும் இண்ந்து கொள்ளுகின்றோம்.

காலப்பகுதி/ சமூக கட்டமைப்பு.         


நாவல் எல்லோருக்கும் தெரிந்த கதைதான். ஆனாலும் கூட கதையினை சொல்லிச்செல்கின்ற முறைமையும், கட்டமைப்பும் காத்திரமானவை. வரலாற்றினை அடிப்படையாக வைத்து  நாவலை கவனமாக சொல்லிச்சென்றிருக்கின்றார். 1986 இல் நாவல் தொடங்குகிறது, பின்பு 91 இல் முதன்மை கதாபாத்திரம் வெளிநாடு செல்கின்றார்,  பின்பு 2003 இல் மீண்டும் நாட்டிற்கூ திரும்பி செல்கின்றார். ,பல வருடங்களை அடிப்படையாக கொண்டு கதை செல்வதோடு, நின்வுத்தடங்களும், நினைவு மீட்டல்களும், கதை செறிவுகளும் என அந்த வரலாறு நடைபெற்றிருக்கின்றது/ சொல்லப்பட்டிருக்கின்றது. அந்த காலப்பகுதியில், வடமராச்சியில்/ பருத்தித்துறை யில் நடைபெற்ற போராட்ட கால கதைகள், அவலங்கள், பாராட்டுங்கள், சமூக அமைப்பில் ஏற்படுகின்ற மாற்றங்கள் என பல முதன்மை கருக்களைக் கொண்டது.  மேலும் பிரதானமாக ஒரு குடும்பமும் அவற்றை சூழவுள்ள அங்கத்தவர்களையும் பின்னணியாக வைத்து, பிரதான கதாபாத்திரமான சாலியின் மூலம் சொல்லப்பட்டிருக்கின்றது.       


1991 இல் ஒரு பிரளயத்தின் இடையே கிடைத்த ஒரு இடைவெளியில், புலம்பெயர்ந்து சென்று மீண்டும் 2003 இல் மீண்டும் பிரதான பாத்திரமான சாலி மீண்டும் நாட்டிற்கு, முக்கியமாக வீட்டிற்கு வந்திருக்கின்றார்

இதுதான் முதலாவது chapterம் கூட. இந்த முதலாவது chapter ஒரு காத்திரமான அமைப்பு. எனக்கு ஒரு சிறப்பான படத்தின் ஆரம்பம் போன்ற ஒரு காட்சியமைப்பினை இங்கே கொண்டு வந்து விடுகிறது.           சமூக அமைப்பு அல்லது கருப்பொருள்கள்:            அமைதியாக சந்தோஷமா போய்க்கொண்டிருந்த ஒரு சமூக அமைப்பு /வீடு என்பன, இனவாதம் அரசியல் வேறுபாடுகள்., இராணுவ வன்முறைகள் என்பவற்றினால் சிக்கலுக்குள் உள்வாங்கப்படுதல் காட்டப்படுகிறது.


சாதரண மக்கள் மீண்டும் மீண்டும் உட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது இன்னல்கள், போராளிகள் உரூவாக்கப்படுதல், மெதுவாக  சமூக கட்டமைப்புக்கள் மாற்றங்களுக்குள் உள்ளாக்கப்படுவதனையும், உள்வாங்கப்படுவதனையும், நிம்மதியின்மை, குழப்பம், பதட்டம் என்பவற்றை கடந்து குறிக்கோள்களை அடைந்து விட போராடுகின்ற போராளிகள் என,  இந்நாவல் காட்டி நிற்கின்றது.

மேலும், மன உளைச்சல்கள், ஆதங்கங்கள், நினைவு மீட்டல்கள்,  சமூக கட்டமைப்பில் ஏற்படுகின்ற மாற்றங்கள், இழப்புக்கள், அதிகாரத்தினையும், சட்டதிதினையும் கேள்விக்குட்படுத்தல் , இடப்பெயர்வுகள்,   அடையாள உணர்வுகள் என பல விடயங்களை  வெளிப்படுத்தி நிற்கின்றது.

ஆசிரியரின் நடுநிலைமையான எழுத்து பிடித்திருந்தது. தனியே போராட்டம், குடும்பம், அரசியல் என்ற ஒரு வட்டத்திற்குள் நின்றுவிடாமல், சாதாரண வாழ்க்கையின் நிழல்களையும்,அவ்வப்போது ஆர்ப்பாட்டமில்லாது இயல்பாகச் சொல்லிச் செல்கின்றார்.


உதாரணமாக, நாளாந்த வாழ்க்கை சம்பவங்கள், வேலை , படிப்பு, சக கலந்துரையாடல்கள், காதல், கல்யாணம்,, சமையல் சாப்பாடு , அதன் சுவை, சமையலறை,


இது மட்டுமல்லாது இயற்கையைப் பற்றிய விமர்சிப்புகள் என்பன கதையின் கருத்தினை எடுத்துச்சொல்ல உதவியிருக்கிறது.             மேலும்,  போர்க்காலம் பற்றி கூறப்பட்டாலும் அதன் நடையில் அங்கலாய்போ,  ஒட்டமோ இல்லாது நிதானமான நடையுடன் கதை நகர்கிறது.  போர்க்காலப்பகுதி என்பது, தனியே, சாதாரண வாழ்க்கை யை குழப்பி விடுகின்ற ஒன்று மட்டுமில்லை, அவலங்கள் துன்பங்கள் மட்டுமில்லை, சமூக கட்டமைப்புக்கள், அரசியல் அதிகார முரண்பாடுகள், பண்பாட்டு விடயங்களை மறுசீரமைக்கும் முக்கியமான மாற்றங்களை, விளக்கங்களை உருவாக்கும் ஒரு சக்தியாக எப்படி மாறிவிடுகின்றன என்பதனையும் கூட இங்கே இந்த நாவல் காட்டி நிற்கின்றது.


கதாபாத்திரங்கள்:          கதாபாத்திரங்களின்  அமைப்பினை கவனமாகவே செய்திருக்கின்றார்- குறிப்பாக பெண் பாத்திரங்கள். அம்மா, சாலி, கயல், விமலி, அப்பத்தா என எல்லோருமே வலிமையானவர்கள்  மட்டுமல்ல தெளிவான சிந்தனை கொண்டவர்களாக, வெற்றிகளை தன்னகத்தே கொண்டவர்களாக இருக்கின்றார்கள். மட்டுமன்றி, desision makers ஆகவும் அமைக்கப்பட்டிருக்கின்றமையும் வரவேற்கத்தக்கது.      சமையலும், சமையல் கட்டும், சாப்பாடுகளும் அம்மா என்ற பிரதான பாத்திரத்துடன் பின்னிப்பிணைந்த ஒன்றாக இருந்தாலும் கூட அவர் அங்கே பிரதான கட்டுக்கோப்பான ஒரு தூணாக, positiveஆன ஒரூ உரு அமைப்பினை காட்டியிருக்கின்றார்.          இதில் இன்னுமொரு முக்கியமான விடயம்,


பெண்ணின் பார்வையிலேயே கதை வளர்ந்து செல்கிறது. சமூகம், அங்கே உள்ள பிரச்சனைகள், உணர்வுகள், அன்புகள், போராட்டங்கள், வாழ்க்கை அமைப்பு முறைமைகள், அந்த நிலத்தில் நடந்திருக்கின்ற பிரச்சனைகள் எல்லாவற்றையும், பெண் நிலை நின்று கச்சிதமாக சொல்லிச் சென்றிருக்கின்றார். காதல் கதைகளையும் கூடத்தான்.                            எனக்கு பிடித்தமான விடயமும் கூடத்தான். பெண்களைப்பற்றி, பெண்கள் பிரச்சனை உணர்வுகள் பற்றி பெண்களாலேயே, அவர்களது குரல்களில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றது.

எனது முதலாவது பட்டப்படிப்பில் dissertation- ஈழத்து தமிழிலக்கியத்தில் பெண்நிலை இலக்கியம் பெறும் இடம், பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் வழிகாட்டலில் செய்து கொண்டிருந்தேன்.  குறிப்பாக, பெண் எழுத்தாளர்கள் பெண்களின் பார்வையில் பெண்களின் உணர்வுகளை எழுதுதல், கதாபாத்திரங்களை சித்தரித்தல், என்பன எவ்வாறு வித்தியாசப்படுகின்றது/ வேறுபடுகின்றது.   ஆக, பெண்கள் பற்றிய பெண்களது பார்வை மிகவும் வித்தியாசமானது. சில உணர்வுகளை, சில விடயங்களை சொல்லும் முறைமை வித்தியாசமானது.        


  இதே வேளை கதாசிரியரினது புத்தக வெளியீடு  80 களின் இறுதிப்பகுதியில் நடைபெற்றது. பேராசிரியர் சிவத்தம்பி  உரை நிகழ்த்தினார். நானும் சென்றிருந்தேன். வட இந்து மகளிர் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.        யுத்த மேகங்கள் சூழ்ந்திருந்த ஒரு இருண்ட பொழுது- அப்போது அவரது எழுத்தாற்றலை மட்டுமல்ல, அவரது கதாபாத்திரங்களை வடிவமைக்கும் முறைமை, பெண்களால் எப்படி பார்க்க முடியும் என்ற பிரத்தியேகமான ஒரு பார்வையை இவரது எழுத்துக்களில் காணக்கூடியதாக இருந்தது. அதே போலத்தான் இப்போதும், வலிந்து கருத்துக்கள் புகுத்தப்பட்டவில்லை.தானாகவே அவருக்கு அமைந்து விடுவதுதான் சிறப்பான விடயம்.

 

முக்கியமான வலிமை அதன் கதாபாத்திரங்களின் வடிவமைப்பில் இருக்கின்றது. ஒவ்வொரு கதாபாத்திரமும் போர் அனுபவத்தின் சுமையை, இழப்பை, வெற்றியை வெவ்வேறு விதங்களில் சுமக்கின்றார்கள். இழப்புக்கள்,  அவலங்கள், நம்பிக்கைகள் என்ற உணர்வுகளின் வழியாக ஒரு நீண்ட கால ஒட்டத்தினை எங்கள் கண்முன்னே மீண்டும் கொண்டு வந்து விடுகின்றார். கதாபாத்திரங்கள், உண்மையாக வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கின்றவர்களாக இருப்பதனால், வாசகர்களும், அவர்களின் பயணத்தில் மீண்டும் உணர்வு பூர்வமாக இணைந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

 உண்மையான அனுபவங்களுடன் ஊடாடி எழுதப்பட்ட இந்த நாவல் ஆழமான சிந்தனையை தூண்டும் அதே நேரம்,  வலிமையான வாசிப்பு அனுபவத்தினையும்கொடுக்கின்றது. அந்த அவலங்கள் நிறைந்த காலங்களை ஒரு வரலாற்றுச் சம்பவமாக அல்லாமல், உயிரோட்டமுள்ள கதை சொல்லும் உணர்ச்சிமிக்க கதாபாத்திரங்களின் மூலம் வாசகர்களை நெருக்கமாக வரலாற்றக்குள்ளும், அனூபவத்திற்குள்ளும் கொண்டு வரப்படுகின்றனர்.

 வாசித்து முடித்தவுடன் கண்முன்னே நீண்டு வந்த ஒரு நினைவுகளுடனான மிகப்பெரிய ஒரு பேரமைதியை, ஒரு பெரிய நிறுத்தத்தை கொண்டு வருகின்றது. ,தொடர்ந்து வந்தது மீண்டும் அந்த நினைவுகளின் பயணம். அதுவே அந்த எழுத்தின் வெற்றியும் கூட.

 

 
 
 

Recent Posts

See All
ஆவணம்” என்ற சொற்பிரயோகமும், குழப்பமான நிலைப்பாடுகளும்

நளாயினி இந்திரன். “ஆவணம்” என்ற சொல், தமிழ் அறிவியல் மற்றும் ஆய்வுத் துறைகளில், பயன்பாட்டின் அடிப்படையில் ஒரு அளவு குழப்பமான சொற்பிரயோகமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, “ஆவணம்” என்ற சொல்லின் தோ

 
 
 
மனதில்........

வேகமாக ஓடிக்கொண்டிருந்தது புகையிரதம், யாழ்ப்பாணத்தை நோக்கி. ஏறக்குறைய 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்த மண்ணினை நோக்கிய பயணம். கனதியான...

 
 
 
Post: Blog2_Post

Subscribe Form

Thanks for submitting!

  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2020 by Nalayini's Blog. Proudly created with Wix.com

bottom of page